மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 96ஆவது பிறந்தநாள் விழாவும், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமும்காஞ்சிபுரம் மாவட்டம் அருகே திருக்கழுக்குன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சர்கார் திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவரும், மூத்த அரசியல் தலைவருமான பழ கருப்பையா கலந்துகொண்டு உரையாற்றினார்.
மேகதாதுவிற்குப் பதில் காவிரி ஆற்றிற்கு தீர்மானம் வேண்டும் - பழ கருப்பையா
காஞ்சிபுரம்: திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பழ கருப்பையா, மேகதாது அணைக்கான தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு பதிலாக காவிரி ஆற்றிற்கான தீர்மானத்தைக் கொண்டுவருவது நல்லது என்று தெரிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “இந்த அரசானது பிரதமருக்கு கைக்கூலியாக அடிமைத்தனம் மிக்கதாக மாறிவிட்டது. எனவே எஞ்சியிருக்கும் ஒன்றரை ஆண்டுகளில் அவர்களது முழு சுயரூபம் தெரியவரும். அப்போது அடுத்தபடியாக கழகத் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியது திமுக மட்டும்தான். இது மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது. கல்வித்துறை அமைச்சர் இருக்கும் இரண்டு மொழிகளில் ஒன்றை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். மத்தியில் இரண்டு மொழி பத்தாது என்று மூன்றாவதாக ஒரு மொழி திணிக்கப்படுகிறது. இந்தியை முழுவதுமாக எதிர்த்த ஒரே கட்சி திமுக மட்டும் தான். மேகதாது அணைக்கான தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு பதிலாக காவிரி ஆற்றிற்கான தீர்மானத்தைக் கொண்டுவருவது நல்லது.