காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே தண்டலம் கிராமத்திற்கு நீர்ப்பாசனம் தரக்கூடிய வெங்கல் ஏரியை, விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏரிகளை தூர்வார அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், அதற்கான பணிகளை கூடிய விரைவில் தொடங்க தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்புக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர்நிலைகளை கார்ப்பரேட்டுக்கு காவு கொடுக்கும் ஜக்கி வாசுதேவ் - பி.ஆர். பாண்டியன்
காஞ்சிபுரம்: நதிகளை இணைப்போம் அமைப்பின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான கருத்துக்களை ஜக்கி வாசுதேவ் பரப்பி வருவதாக, விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் குற்றஞ்சாட்டினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஏரிகளும் இந்த வருடம் பெய்யும் மழையைத் தேக்கி வைக்க முடியாத நிலையில் இருப்பதால், அனைத்து ஏரிகளையும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பே தூர்வார வேண்டும்.
ஈஷா யோக நிறுவனர் ஜக்கி வாசுதேவ், நதிகளை இணைப்போம் அமைப்பின் மூலம் நீர்நிலைகளில் மரங்களை வளர்க்க வேண்டும் என்று கூறி விட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான கருத்துக்களை பரப்பி வருகிறார். அவருடைய பயணம் அரசியல்வாதிகளே தோல்வி காண்கிற வகையில் இருக்கிறது, என்றார். மேலும், திருப்போரூர் அருகே ஆறு வழிச் சாலை அமைப்பதற்காக கிராமமக்களே உரிய நிலங்களை வழங்கியதாகவும், அதற்கு உரிய நிதியை அரசு வழங்கவில்லை என்றால் வீதியில் இறங்கி போராடுவோம் என்று எச்சரித்தார்.