காஞ்சிபுரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திறக்கப்பட்ட 24 மணி நேர கரோனா பேரிடர் உதவி மையத்தை, 89251 20326 என்ற எண்ணிற்கு உதவி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பல தரப்பு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மருத்துவ உதவிகள் சம்மந்தமான அனைத்து பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது.
மேலும், மருத்துவ ஆலோசனைகள் பெற முடியாமல் தவிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்ததையடுத்து, பல தனியார் அமைப்புகளும் மருத்துவ ஆலோனைகள், பிறச்சேவைகளை வழங்க உதவி மையங்களை அமைத்துள்ளன. அந்த வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் கரோனா பேரிடர் உதவி மையங்களை அமைத்துள்ளனர்.
அதில் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் ஒலிமுகமதுப்பேட்டை பகுதியில், காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று(ஜூன்.6) கரோனா பேரிடர் உதவி மையம் திறக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு இம்மையத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள,89251 20326என்ற எண்ணில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பொது மக்கள் தொடர்பு கொண்டால் மருத்துவ ஆலோசனைகள், மருத்துவ சேவைகள், மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்த விவரங்களைப் பெறலாம் எனவும், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவதற்காக 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையும் படிங்க: செம்மொழியான தமிழ்மொழியே!'