தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு - Kanchipuram district news

காஞ்சிபுரம்: மாமண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

By

Published : Sep 24, 2020, 1:23 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மாமண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தில் பயணிப்பவர்களுக்காக உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒரு உணவகத்திற்கு விருத்தாச்சலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் வண்டியை திருப்பியுள்ளார்.

அப்பொழுது செங்கல்பட்டில் இருந்து மதுராந்தகம் நோக்கி வந்த இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த எல்.எண்டத்தூர் பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் பூபாலன் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயமடைந்த இருவரையும் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இன்ஷூரன்ஸ் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details