காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பால்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் ஒரகடம் சாலை ஓரம் தனது வீட்டிற்கு மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, தனியார் தொழிற்சாலைப் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக மிதிவண்டி மீது மோதியதில், ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த ஒரகடம் காவல் துறையினர் விபத்தில் உயிரிழந்த ஜெயக்குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இவ்விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணைை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:உ.பி.யில் தொடரும் வன்முறைச் சம்பவங்கள் - இளம் பெண் மீது திராவகம் வீச்சு!