தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

படப்பை அருகே இருசக்கர வாகன விபத்து - ஒருவர் பலி - இருச்சக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி

காஞ்சிபுரம்: படப்பை அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். இருசக்கர வாகனத்தில் சென்ற மற்றொரு நபர் படுகாயமடைந்தார்.

kancheepuram district latest news
Bike accident in TN

By

Published : Jun 1, 2020, 10:38 PM IST

தூத்துக்குடி மாவட்டம், கே.கைலாசபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் சென்னை பல்லாவரத்தில் வசித்து வருகிறார். முருகேசனும், அதே பகுதியைச் சேர்ந்த கருணாகரனும் காஞ்சிபுரத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது வஞ்சுவஞ்செரி அருகில் வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த கருணாகரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து அப்பகுதி மக்கள் மணிமங்கலம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மணிமங்கலம் காவல்துறையினர், கருணாகரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த முருகேசன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details