கரோனா நோய்த் தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவீர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இவரின் கோரிக்கைக்கு இணங்க பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த எழுத்தாளர் சிவஞானம் என்பவர் தனது 45 ஆண்டுகால சிறு சேமிப்பான ஒரு லட்சம் ரூபாய் பணத்திற்கான காசோலையை கரோனா நிவாரண நிதிக்காக அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் வழங்கியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் கரோனா நிதி வழங்கிய முதியவர்கள் - சிறப்பு தொகுப்பு அதேபோல பெரிய காஞ்சிபுரத்தை சேர்ந்த சித்த வைத்தியர் நா.கு.கண்ணப்பர் என்பவரும் ஒரு லட்ச ரூபாய் காசோலையை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
முதியவர்களான இவர்கள், "நாங்கள் வாழ்ந்து முடிந்து விட்டோம். நாளைய தலைமுறை நன்றாக இருக்கனும். அனைவரும் கரோனா நிவாரண நிதி வழங்க முன்வர வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளனர். இவர்களது செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
இதையும் படிங்க: 'கரோனாவுக்கு போட்டியாக புதிய நோய்' - கொள்ளை நோயான மியூகோர்மைகோசிஸ்