தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கரும்பு, மண்வெட்டியுடன் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் வேட்பாளர்! - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சால்டின் சாமுவேல்

காஞ்சிபுரம்: ஒரு கையில் மண்வெட்டி, மற்றொரு கையில் மடிக்கணினி வைத்துக் கொண்டு, நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் வேட்பாளர் சால்டின் சாமுவேல் மாட்டு வண்டியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.

ntk kancheepuram contestant files nomination
காஞ்சிபுரம் நாம் தமிழர் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

By

Published : Mar 18, 2021, 9:07 AM IST

நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் தொகுதியின் வேட்பாளர் சாமுவேல், செங்கரும்பால் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது ஒரு கையில் மண் வெட்டியும், மற்றொரு கையில் மடிக்கணினியும் வைத்திருந்தார். அவருடன் 100க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் ஊர்வலமாக வந்தனர்.

மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த காஞ்சிபுரம் நாம் தமிழர் வேட்பாளர்

தொடர்ந்து காஞ்சிபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாச்சியருமான ராஜலட்சுமியிடம் வேட்பாளர் சால்டின் சாமுவேல் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க: ஸ்டாலின் வருகை: பட்டாசு வெடித்த தொண்டர்கள் பலருக்கும் தீக்காயம்!

ABOUT THE AUTHOR

...view details