தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கியதில் வடமாநிலத் தொழிலாளர் உயிரிழந்தார்.

north indian worker Death by electric shock
north indian worker Death by electric shock

By

Published : Dec 22, 2020, 8:27 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட் பகுதியில் தாய் காஸ்டிங் என்ற தனியார் நிறுவனத்தில் கட்டுமானப் பணி நடைபெற்றுவருகிறது.

இங்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அஜித் சர்க்கார் (26) என்ற இளைஞர் வேலை செய்து வந்தார். நேற்று (டிச.21) அஜித் சர்க்கார் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, மேலே இருந்த மின் கம்பியை கவனிக்காமல் கீழே இருந்த கம்பியை தூக்கியபோது அதில் மின்சாரம் பாய்ந்தது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துமனைக்கு கொண்டுச்சென்றனர். இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, காவல்துறையினர் அஜித் சர்க்காரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க... அறுவடை இயந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details