காஞ்சிபுரம்மாவட்டம்வில்லிவலம் கிராமத்தின் அருகே பாலாறு செல்கிறது. இன்று (நவ.19) காலை வழக்கம்போல் அந்த கிராமத்தில் இருக்கும் ஆடு மேய்ப்பவர்கள் தங்களது ஆடுகளை மேய்ச்சல் நிலத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பாலாற்றில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனால் கடுமையான வெள்ளப்பெருக்கு பாலாற்றில் ஏற்பட்டுள்ளது. இதனால் வில்லிவலம் கிராமம் அருகே இருக்கக்கூடிய வயல்வெளியில் பாலாற்று வெள்ள நீர் திடீரென புகுந்து மேய்ச்சலில் இருந்த 20க்கும் மேற்பட்ட மாடுகள், 200க்கும் மேற்பட்ட ஆடுகளை அடித்துச் சென்றது.
மேலும், மேய்ச்சலுக்குச் சென்ற பத்துக்கும் மேற்பட்டவர்கள் வயல்வெளியிலுள்ள ஒரு மேட்டுப் பகுதியில் சிக்கிக்கொண்டனர்.