தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தேசிய பேரிடர் மேலாண்மை மைய மத்திய குழுவினர் கலந்தாய்வு - நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

காஞ்சிபுரம்: நிவர் புயல், வடகிழக்கு பருவமழை குறித்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேசிய பேரிடர் மேலாண்மை மைய மத்திய குழுவினர் மாவட்ட ஆட்சியர், அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வில் ஈடுபட்டனர்.

National Disaster Management
National Disaster Management

By

Published : Jan 23, 2021, 3:25 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவர் புயல், வடகிழக்கு பருவமழை குறித்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில், தேசிய பேரிடர் மேலாண்மை மைய மத்திய குழு துணை ஆலோசகர் நவல் பிரகாஷ், சார்பு செயலர் பங்கஜ்குமார், இணை ஆலோசகர் திவாரி ஆகியோர் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் இன்று (ஜனவரி 22) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிவர் புயல், வடகிழக்கு பருவ மழையின்போது பொதுப்பணித் துறை, வேளாண்மை துறை, வருவாய் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அந்தந்த துறையினர் மத்திய குழுவிடம் விவரித்தனர்.

இனி வரும் காலங்களில் மாவட்டத்தில் உள்ள நீர் தேக்கங்களில் புயல், வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக ஏரி கரைகளை பலப்படுத்துதல், தூர்வாரி சீரமைத்தல், மழைக்காலங்களில் நீர் வெளியேறிட மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் தேசிய பேரிடர் மேலாண்மை மைய மத்திய குழுவினர் ஆலோசித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் துறை அலுவலர் (பொறுப்பு) மணிவண்ணன், மாவட்ட ஊர்க வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், அணைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details