தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார் விபத்து; 3 பேர் மருத்துவமனையில் அனுமதி - நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விபத்தில் படுகாயம்

காஞ்சிபுரம்: நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த நிர்வாகிகளின் கார் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார் விபத்து  3 பேர் மருத்துவமனையில் அனுமதி
நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார் விபத்து 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

By

Published : Mar 1, 2021, 1:14 PM IST

காஞ்சிபுரம் மண்டித்தெரு பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெயசீலன், காஞ்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமலை, நிர்வாகி ராகேஷ் ஆகிய மூவரும் சென்னையிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தனர்.

வாலாஜாபாத் அருகே உள்ள ஊத்துக்காடு பகுதியில் கார் வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் குறுக்கே வந்தது. இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க காரை திருப்பியவுடன், எதிர்பாராதவிதமாக கார் சாலை தடுப்பு சுவரின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவிக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக காட்டங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மூவரும் கொண்டு செல்லப்பட்டனர்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார் விபத்து- 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கட்சி நிர்வாகிகள், விபத்தில் படுகாயமடைந்த செய்தி தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து குறித்து வாலாஜாபாத் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க :நரேந்திர மோடிக்கு கோவாக்ஸின் செலுத்திய தமிழச்சி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details