செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ’எனது மருத்துவமனை எனது பெருமை’ என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்டத்தின் கோட்டாட்சியர் பேசுகையில், மருத்துவமனைக்கு தேவையான எந்தவித உதவியாக இருந்தாலும் உடனடியாக கேளுங்கள் என்னால் முடிந்தவரை விரைவில் செய்து முடித்துத் தருகிறேன் என உறுதி அளித்தார்.
அதன் பின் பேசிய மாவட்டத்தின் துணை ஆட்சியர் பிரியா, ’தனியார் மருத்துவமனைகளைவிட சிறப்பான முறையிலும் அதிக திறன் மிக்க மருத்துவர்களைக் கொண்டும் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மிக சிறப்பாக செயல்படுகிறது. எனது மருத்துவமனை எனது பெருமை என்ற தலைப்பு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு மிகவும் பொருந்தக்கூடியது’ என்றார்.