காஞ்சிபுரம் மாவட்டம், முசவரவாக்கம் கிராமத்தில் விவசாயமே பிரதானத் தொழிலாக இருக்கிறது. தற்போது இங்கு 2,500 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரடபட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் கடந்த காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்ததோடு, அதற்கான கட்டத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. முன்னதாக இப்பருவத்திற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேளாண்மை துறை , மண்டல மேலாளர், ஆட்சியர் அலுவலகம் என விண்ணப்பம் செய்த நிலையில், இறுதியாக ஆட்சியரிடம் தங்கள் குறைகளை நேரில் சந்தித்து தெரிவிக்க, கிராம விவசாய ஆர்வலர் குழுவினர் முயன்றனர். ஆனால் தேர்தல் பணி காரணமாக சந்திக்க இயலாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.