காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் வரை நாளொன்றுக்கு 1000-க்கும் மேற்பட்டோர் கரோனா நோய்த்தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சைப் பெற்றுவந்தனர்.
இந்நிலையில், தொற்றுப் பரவல் மெள்ள மெள்ள குறைந்து தற்போது மாவட்டம் முழுவதும் 300-க்கும் கீழ் நாளொன்றுக்கு தொற்றுப் பாதிப்பு குறைந்துவருகின்றது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் கரோனா நோய்த்தொற்று அதிகரிக்காமல் இருக்க காஞ்சிபுரம் பெருநகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில் வீடுதோறும் சுகாதாரப் பணியாளர்கள், சுகாதாரத் துறையினர் என ஐந்து பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் ஆக்சிஜன் பரிசோதனை, உடலின் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.