காஞ்சிபுரத்தில் பழைமையான ராஜாஜி மார்க்கெட் நகரின் மையப் பகுதியில், 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கரோனா தொற்று காரணமாக, இந்த சந்தையானது தற்காலிகமாக
வையாவூர் பகுதிக்கு மாற்றப்பட்டது.
தற்போது மழைக் காலம் என்பதால், அப்பகுதியில் பெய்யும் மழையால் தண்ணீர் செல்ல வழி இல்லாததால், ஆங்காங்கே குட்டை போல் தேங்கி நின்று சேறும், சகதியுமாகக் காட்சியளிக்கிறது.
புதிய மார்க்கெட் பகுதி அமையும் இடத்தை ஆய்வு செய்த நகராட்சி ஆணையர்! - தற்காலிக காய்கறி சந்தை
காஞ்சிபுரம்: வையாவூரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட் மழைக்காலங்களில் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் வேறு இடத்தில் புதிதாக அமைக்க நகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்.
இதன் காரணமாக, விற்பனையாளர்களும், பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் கடைகளும் செயல்பட முடியாமல் அவ்வப்போது பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கின்றன.
இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் அந்த சந்தையைக் காஞ்சிபுரம் அருகே நசரத்பேட்டை உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்திற்கு மாற்றப் போவதாக, ஆட்சித் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, தாசில்தார் ஆகியோர் மார்க்கெட் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். இந்த இடத்தில் 168 கடைகள் அமைக்கப்போவதாக, நகராட்சியால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி மார்க்கெட் நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.