காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வெள்ளைக்குளம் பகுதியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள், அவசரக்கால உதவிகளை மேற்கொள்ள, பெரு நகராட்சி சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் பெரு நகராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று (மே.28) நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் முஜிபூர் ரகுமான் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களின் பகுதிகளுக்குச் சென்று அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, அரசின் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றிட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.