சென்னை அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம், மேற்கு தாம்பரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் அடையாறு ஆறு நிரம்பும் அளவை எட்டியுள்ளது. இதனால் ஆற்றில் பெருமளவு தண்ணீர் ஓடுவதால், வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
வெள்ளப் பெருக்கு அபாயம்: அடையாறு ஆற்றை ஆய்வு செய்தார் ஆட்சியர் - அடையாறு ஆற்றை ஆய்வு செய்தார் ஆட்சியர்
காஞ்சிபுரம்: வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளான மேற்கு தாம்பரம், அனகாபுத்தூர், முடிச்சூர் உள்ளிட்ட இடங்களில் காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், காஞ்சிபுரம் மாவட்ட வெள்ள தடுப்பு சிறப்பு அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் அடையாறு ஆற்றை பார்வையிட்டனர்.
மேலும், வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் வரதராஜபுரம், முடிச்சூர், மஹாலட்சுமி நகர் உள்ளிட்ட அடையாறு ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணிகள் குறித்து அலுவலர்களிடம் ஆலோசித்தனர்.