காஞ்சிபுரம்: கோயில் நகரமும், சுற்றுலாத்தலமானதுமான காஞ்சிபுரம் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமில்லை. பட்டு சேலை வாங்கவும் கோயில்களில் தரிசனம் செய்யவும் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகரின் பிரதான சந்திப்புகளில் ஒன்றான மூங்கில் மண்டபம் பகுதியில் இருந்து காந்திசாலை தேரடியிற்கு சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று ஆட்டோவை முந்தி சென்றது. அப்போது எதிரே வந்த மற்றொரு உணவு டெலிவரி செய்யும் இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.