சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சோகண்டி பகுதியிலிருந்து மதுரமங்கலம் செல்லும் செக்போஸ்ட் அருகில் எதிரெதிரே வந்த இரு ஆட்டோக்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ஒரு ஆட்டோ ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் அதே ஆட்டோவில் பயணித்த கந்தூர் மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்த தாய் கண்ணகி (38) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்ணகியின் மகளான ஜனனி (13) விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற சிறுமி ஜனனி, மேல் சிகிச்சைக்காக பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி ஜனனி உயிரிழந்தார். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.