தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சி: தாய்- மகள் ஒரே நாளில் தற்கொலை! - chinna kanchipuram

சின்ன காஞ்சிபுரம் காளியம்மன் கோயில் தெருவில், உடல் வலியால் தாயும், தாயைப் பார்த்து மகளும் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

mother-and-daughter-commited-suicide-in-chinna-kanchipuram
காஞ்சி: தாய், மகள் ஒரே நாளில் தற்கொலை; சோகத்தில் மூழ்கிய குடும்பம்

By

Published : Jul 10, 2021, 9:13 AM IST

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உள்பட்ட சின்ன காஞ்சிபுரம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அன்பு. தனியார் பட்டுசேலை கடையில் வேலை செய்து இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

ரேணுகாவிற்கு அவ்வப்போது, உடல் நிலை சரியில்லாமல் போகும் எனவும், அடிக்கடி மருத்துவமனை சென்று அவர் சிகிச்சை எடுத்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று கணவர் அன்பும், பெரிய மகளும் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், ரேணுகாவுக்கு உடல்நிலை மேசமடைந்துள்ளது.

அப்போது, ஏற்பட்ட உடல்வலியை தாங்கமுடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைச் சற்றும் எதிர்பாராத இளைய மகள் தாய் மீது கொண்ட பாசத்தாலும், தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்ததாலும், அவரும் தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து வேலைக்குச் சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பிய அன்பு, ரேணுகாவும், தனது இளைய மகளும் தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியுற்றார். பின்னர், இதுதொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கிரேன் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details