காஞ்சிபுரம்: மீனாட்சி லேகி தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கியக் கோயில்களில் ஆய்வுமேற்கொண்டும் சாமி தரிசனம் செய்தும் வருகிறார். அந்தவகையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் ஆய்வுமேற்கொண்டார். பிரசித்திப் பெற்ற கைலாசநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்து, அங்குள்ள கலை சிற்பங்களைக் கண்டு ரசித்தார்.
அதன்பின் உலகப் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின் தேவராஜப் பெருமாள் சன்னதி முன் மீனாட்சி லேகி, கோயில் செயல் அலுவலர் தியாகராஜன், கோயில் தலைமை அர்ச்சகர்கள், பாஜக நிர்வாகிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படத்தில் தேவராஜப் பெருமாள் முழுவதுமாகத் தெரியும் வகையில் உள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.