தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக சார்பில் ரத்ததான முகாம்... எல் முருகன் முன்னால் மயங்கி விழுந்த தொண்டர்.... - முகாமில் 203 பேர் ரத்ததானம்

காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட ரத்ததான முகாமில் அக்கட்சியின் தொண்டர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharatமோடி பிறந்தநாள் ரத்த தான முகாமில் மயங்கி விழுந்த பாஜக தொண்டர்
Etv Bharatமோடி பிறந்தநாள் ரத்த தான முகாமில் மயங்கி விழுந்த பாஜக தொண்டர்

By

Published : Sep 17, 2022, 8:44 PM IST

காஞ்சிபுரம்:பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக இளைஞரணி சார்பில் காஞ்சிபுரத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தொடக்கி வைத்தார். இந்த முகாமில் ரத்தம் கொடுத்த அக்கட்சியின் தொண்டர் ஒருவர் எல் முருகன் முன்னாலேயே முன்னிலையிலேயே திடீரென மயங்கி கீழே விழுந்தார்.


இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் எல் முருகன் கூட்டத்தை விலக்கி விட்டு, மருத்துவரை அழைத்து அவரை பரிசோதிக்க செய்தார். உடல் சோர்வில் அவர் மயங்கியாத மருத்துவர் தெரிவித்தார். அதன்படி சிறிது நேரத்தில் அவர் கண் விழித்து இயல்பு நிலைக்கு திரும்பினார். அதன்பின் எல் முருகன் இம்முகாமில் புதியதாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கியும், மருத்துவர்களுக்கு நினைவுப் கொடுத்துவிட்டும் சென்றார். இந்த முகாமில் 203 பேர் ரத்ததானம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் பாஜக மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு, காஞ்சிபுரம் கோட்ட பொறுப்பாளர்கள் வினோத், பாஸ்கரன், நகர் தலைவர் காஞ்சி.ஜீவானந்தம் ஆகியோர் உட்பட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:பள்ளிவாசலுக்கு அருகே வைக்கப்பட்ட பிரதமர் மோடியின் பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு...!

ABOUT THE AUTHOR

...view details