காஞ்சிபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் கோபிநாத் போட்டியிடுகிறார். இன்றுடன் தேர்தல் பரப்புரை முடிவடைவதையொட்டி கோபிநாத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
மனிதச் சங்கிலி அமைத்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்! - மனித சங்கிலி அமைத்து வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம்: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கோபிநாத் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் முக்கியச் சாலையில் மனிதச் சங்கிலி அமைத்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மனித சங்கிலி
காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே வந்த அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகளிடம் வாக்குச் சேகரித்தார். அதைத் தொடர்ந்து மூங்கில் மண்டபம் முதல் காந்தி சாலைவரை சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் மனிதச் சங்கிலி அமைத்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து கோபிநாத் வாக்குச் சேகரித்தார்.
மனிதச் சங்கிலி அமைத்து வாக்குச் சேகரிப்பு