தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம் கோரிக்கை - tamilnadu latest news

காஞ்சிபுரம்: புதிய ரயில் நிலையம் அமைக்க தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம் எம்எல்ஏ எழிலரசன் கோரிக்கை வைத்தார்.

தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம் எம்எல்ஏ கோரிக்கை
தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம் எம்எல்ஏ கோரிக்கை

By

Published : Jan 28, 2021, 8:52 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரிக்கரை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஜான்தாமஸ் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ரயில் நிலைய தண்டவாளத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள், ரயில்வே கேட் பாரமரிப்பு, ரயில் நிலையங்களின் அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். மேலும் கழிப்பறை, ஊழியர்களின் ஓய்வு அறைகளையும் ஆய்வு செய்தார்.

இதனிடையே தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஜான்தாமஸிடம் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன் தெரிவித்ததாவது, "காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் கட்டி முடிக்கப்படாமலிருக்கும் சாலை, மேம்பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும். காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணத்திற்கு புதிய ரயில் சேவை தொடங்க வேண்டும். மகளிர் பயணம் செய்ய கூடுதல் பெட்டிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும்" இவ்வாறு தெரிவித்தார்.

இதையும் படிங்க: மனைவிக்கு பிறந்தநாள் - ஹெலிகாப்டர் பயணத்தை பரிசாகக் கொடுத்த கணவர்!

ABOUT THE AUTHOR

...view details