தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் உயர்த்தப்பட்ட புதிய மின்மாற்றிகள் திறந்துவைப்பு - காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி. எழிலரசன்

காஞ்சிபுரம்: பெருநகராட்சிப் பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட இரண்டு புதிய மின்மாற்றிகளை காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் இன்று திறந்துவைத்தார்.

காஞ்சிபுரம் எம்.எல்.ஏ
காஞ்சிபுரம் எம்.எல்.ஏ

By

Published : Jun 10, 2021, 6:27 PM IST

காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குள்பட்ட ரயில்வே சாலை அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம் பகுதியிலும், ஆனந்த பேட்டை பகுதியிலும் அவ்வப்போது மின்னழுத்தத்தில் ஏற்ற இறக்கங்கள் எழுகின்றன.

இதனால் மின்சாதன பொருள்கள் அடிக்கடி பழுதடைகின்றன. இதையடுத்து, இப்பகுதியில் உள்ள மின்மாற்றிகளைத் தரம் உயர்த்தக்கோரி காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசனிடம் கோரிக்கைவைத்தனர்.

இதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அவர் வேண்டுகோள்விடுத்தார். சட்டப்பேரவை உறுப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க இப்பகுதியில் இருந்த 110 கே.வி. மின்மாற்றிகள் 250 கே.வி.யாக தரம் உயர்த்தப்பட்டு புதிய மின்மாற்றிகளை மின்சார வாரியம் அமைத்தது.

அதனைத் தொடர்ந்து அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம் பகுதியிலும், ஆனந்த பேட்டை பகுதியிலும் புதியதாக அமைக்கப்பட்ட தரம் உயர்த்தப்பட்ட மின்மாற்றிகளை இன்று (ஜுன் 10) சி.வி.எம்.பி. எழிலரசன் திறந்துவைத்து மின்மாற்றிகளின் செயல்பாடுகளைத் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மின்சார வாரிய காஞ்சிபுரம் கோட்ட அலுவலர்கள், காஞ்சிபுரம் திமுக நகரச் செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details