தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மினி தண்ணீர் தொட்டி அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ! - MLA CVMP Ezhilarasan

காஞ்சிபுரம்: பொது மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ. 8.75 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக்கிணறு, மினி தண்ணீர் தொட்டி அமைக்கும் பணியினை எம்எல்ஏ எழிலரசன் தொடக்கி வைத்தார்.

காஞ்சிபுரம்  மினி தண்ணீர் தொட்டி  Mini water tank  MLA who started the work of setting up the mini water tank in Kancheepuram  எம்எல்ஏ சி.வி.எம்.பி எழிலரசன்  MLA CVMP Ezhilarasan  மினி தண்ணீர் தொட்டி அமைக்கும் பணிகள் தொடக்கம்   Suggested Mapping : state
MLA CVMP Ezhilarasan

By

Published : Dec 29, 2020, 3:52 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், பெரு நகராட்சிக்கு உட்பட்ட 17ஆவது வட்டம் பிள்ளையார் பாளையம் கச்சபேஸ்வரர் நகரில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி பொதுமக்கள் நாள்தோறும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தனர்.

எம்.எல்.ஏவிடம் புகார்

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசனிடம் புகார் தெரிவித்து, குடிநீர் பற்றாக்குறையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் கச்சபேஸ்வரர் நகர் மக்களின் குறைகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

நிதி ஒதுக்கீடு

பின்னர் தனது சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8.75 லட்சம் செலவில், ஆழ்துளை கிணறு அமைத்து மினி தண்ணீர் தொட்டி கட்டித்தர நிதி ஒதுக்கீடு செய்தார்.

பணிகள் தொடக்கம்

அதன்படி, அப்பகுதியில் புதியதாக ஆழ்துளை கிணறு அமைத்து மினி தண்ணீர் தொட்டி கட்டும் பணியை பொதுமக்கள் முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன் இன்று (டிசம்பர் 29) தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, பெரு நகராட்சி பொறியாளர் ஆனந்த ஜோதி, திமுக மாவட்ட அவைத்தலைவர் சி.வி.அ சேகரன், நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:'ஒரு தண்ணீர் தொட்டி ரூ.7.70 லட்சமா?' - மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்

ABOUT THE AUTHOR

...view details