காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் தனியார் தொழிற்சாலை கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையின் நிரந்தரப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 100 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் தொழிற்சாலை நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தொழிற்சாலைப் பணியாளர்கள் வருமானமின்றி திண்டாடி வருகின்றனர். இதில் ஏற்பட்ட மன உளைச்சலில் மணிகண்டன் (26) சமூக வலைதளத்தில் காணொலி ஒன்றை இன்று (டிச.28) வெளியிட்டுள்ளார்.