காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மொபிஸ் இந்தியா பவுண்டேஷன் நிறுவனம் சார்பில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்ஸ், ஆக்ஸிஜன் ரெகுலேட்டர்ஸ், படுக்கைகள், முகக் கவசங்கள் மற்றும் கரோனா நோய் சிகிச்சைக்காக பயன்படுத்தக் கூடிய மருத்துவ உபகரணங்களை, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சை மையங்களுக்குக் கொண்டு செல்லும் வாகனத்தை தமிழ்நாடு ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீதான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில், ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் தா.மோ.அன்பரசன்! - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
காஞ்சிபுரம்: நேற்று (ஜூன்3) நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சரின் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ், அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
இவ்விழாவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட 6 ஆயிரம் மனுக்களில் முதற்கட்டமாக 792 மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு, 12 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனைப்பட்டா, இஸ்திரிப் பெட்டிகள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் மூன்று சக்கர வாகனங்கள், குடும்ப அட்டை, விவசாய மின் இணைப்புக்காண ஆணைகள், புதிய சாலை வசதிகள், மாவட்டத் தொழில் மையம் சார்பில் மானியத்துடன் கூடிய தொழில் கடன் உதவித்தொகைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், எம்.எல்.ஏக்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன்,செல்வப்பெருந்தகை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அதிகாரி பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.