காஞ்சிபுரம் அடுத்த காரை பகுதியில் நிவர் , புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (டிச.08) ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அமைச்சரின் கார் எதிரே மிதிவண்டியில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு சாலையில் கீழே விழுந்ததார்.