காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சித்தேரியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ. 24.77 லட்சம் நிதி ஒதுக்கியது. இதைத் தொடர்ந்து இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
குடிமராமத்து பணிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் பெஞ்சமின் - Minister Benjamin
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சித்தேரி பகுதியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் குளங்களையும் ஏரிகளையும் தூர்வாரி, மழை நீர் சேமிப்புக்கான பராமரிப்புப் பணிகளை செய்து முடிக்க வேண்டும். அதனடிப்படையில்தான் தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடையும் என்றார்.
இதற்கு முன்னதாக அரசு அலுவலர்கள் தேவையில்லாத திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கி செலவு செய்வதாகவும், தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக் கோரியும் அமைச்சரை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.