காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
’ரஜினியை பற்றி எங்களுக்கு கவலை இல்லை' - அமைச்சர் பெஞ்சமின் - ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின்
காஞ்சிபுரம்: யார் கட்சி ஆரம்பித்தாலும் ஆரம்பிக்காமல் போனாலும் அதிமுகவிற்கு கவலை இல்லை என ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் கூறியுள்ளார்.
benjamin
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஜினியை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. மக்கள் சேவை என்கிற லட்சியப் பயணத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் அதிமுக அரசு இருக்கும். யார் கட்சி ஆரம்பித்தாலும் ஆரம்பிக்காமல் போனாலும் அதிமுகவிற்கு கவலை இல்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2021 லும் நல்லாட்சி தொடரும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரஜினியின் அரசியல் நிலைப்பாடு ஏற்புடையது - ஜி.கே. வாசன்