தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழ்க்கதிர்பூரில் 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு -தா.மோ.அன்பரசன் வழங்கினார்..! - 2112 residences

காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிர்பூரில் 190.08 கோடியில் மதிப்புள்ள 2112 வீடுகள் உள்ளடக்கிய 3 அடுக்கு மாடி குடியிருப்புகளில் முதற்கட்டமாக பயனாளி பங்களிப்பு தொகை செலுத்திய 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணையை த அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

கீழ்க்கதிர்பூரில் 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு குடியிருப்புகள் -தா.மோ.அன்பரசன் வழங்கினார்..!
கீழ்க்கதிர்பூரில் 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு குடியிருப்புகள் -தா.மோ.அன்பரசன் வழங்கினார்..!

By

Published : Jul 5, 2022, 9:42 PM IST

காஞ்சிபுரம்:அடுத்த கீழ்க்கதிர்பூர் கிராமத்தில் நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் 6.99 ஹெக்டேரில் 3 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட 33 பிளாக்குகளுடன் கூடிய 2112 குடியிருப்புகள் மற்றும் அடிப்படை மேம்பாட்டு வசதிகளான அங்கன்வாடி மையம், ஆரம்ப பள்ளிகூடம், ஆரம்ப சுகாதார நிலையம், பால் அங்காடி, நியாய விலை கடை, கடைகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை ரூ.190.08 கோடி திட்டம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வேகவதி ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு செய்து குடியிருக்கும் பொது மக்கள், பெரு வெள்ளக் காலங்களில் வெள்ள நீர் வீட்டுக்குள் புகுந்து பெரிதும் பாதிப்படைவதை தடுக்கும் வகையில் அங்கு வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி கீழ்கதிர்பூரில் கட்டப்பட்டுள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இக்குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகளும் 400 சதுர அடி கொண்டது. மொத்தம் 9 லட்சம் மதிப்பில் ஒவ்வொரு வீடும் பயனாளிக்கு அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழ்நாடு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இக்குடியிருப்புகளை திறந்து வைத்து முதற்கட்டமாக 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணையை வழங்கினார்.

இதில் மாவட்ட நிர்வாகம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேகவதி ஆற்றங்கரையில் குடியிருந்த 1406 பயனாளிகள் மற்றும் பொருளாதரத்தில் பின் தங்கியவர்களாக தேர்வு செய்யப்பட்ட 706 பயனாளிகள் என 2112 பயனாளிகளில் முதற்கட்டமாக பயனாளிகள் பங்களிப்பு தொகையை செலுத்தியவர்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் பயனாளி பங்களிப்பு தொகை செலுத்தியப்பின் அடுத்தகட்டமாக அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி,காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம்,சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர்,சி.வி.எம்.பி. எழிலரசன்,மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் படப்பை மனோகரன்,துனை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,துணை மேயர் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள்,திமுக நிர்வாகிகள்,பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு படிப்படியாக புதிய குடியிருப்புகள் கட்டப்படும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

ABOUT THE AUTHOR

...view details