தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதுக்கு சரிபட்டுவரமாட்டார்' - வடிவேலு டயலாக்கை வைத்து ஸ்டாலினை சாடிய ஓபிஎஸ்! - mgr birthday celebration in thirukazhukundram

காஞ்சிபுரம்: திமுக தலைவர் ஸ்டாலின் குட்டிக்கரணம் போட்டாலும் முதலமைச்சராக முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சாடினார்.

Ops Speech, mgr birthday celebration
mgr birthday celebration

By

Published : Jan 24, 2020, 9:27 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் நேற்று எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அப்போது பேசிய துணை முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வகுத்த பசுமை வீடு திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அது ஒரு போதும் நடக்கப்போவதில்லை என்றார்.

அப்போது நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்திருந்த ஒரு படத்தின் காட்சியில் இடம்பெற்றிருந்த 'நீ அதுக்கு சரிபட்டுவரமாட்ட' என்ற வசனத்தைக் குறிப்பிட்ட துணை முதலைமைச்சர், ஸ்டாலின் குட்டிக்கரணம் போட்டாலும் முதலமைச்சராக முடியாது என சாடினார்.

விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்

மேலும், தமிழ்நாட்டில் பொய்யான வாக்குறுதிகளைப் பரப்பி மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால் அதிமுக சரிவை சந்தித்தது. ஆனால் அதன்பின் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களில் வெற்றிபெற்று திமுகவுக்கு பதிலடி கொடுத்தோம். இந்த அடியில் இருந்து திமுகவால் எப்போதும் எழுச்சி காண முடியாது என்று கூறினார்.

இதையும் படிங்க: பிரெக்ஸிட்: ராணி எலிசபத் ஒப்புதல்!

ABOUT THE AUTHOR

...view details