காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள காரணை கிராமத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகள் ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோருக்கு நினைவுத்தூண் நிறுவப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் வாக்காளர்கள் திமுக, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்குகள் செலுத்தி அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.