காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதப்பதாக காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவயிடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது தடயங்களை சேகரித்த காவல் துறையினர் உயிரிழந்த நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.