தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் - பாமா ருக்மணி சமேத வேணுகோபாலசுவாமி கோவில்

காஞ்சிபுரம் மாவட்டம் உக்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி, ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோயிலின் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

வேணுகோபால் சுவாமி திருக்கோவில் இன்று மஹா கும்பாபிஷேகம்
வேணுகோபால் சுவாமி திருக்கோவில் இன்று மஹா கும்பாபிஷேகம்

By

Published : Aug 21, 2022, 6:50 PM IST

காஞ்சிபுரம் மாநகரின் தென் கிழக்கே உள்ள உக்கல் கிராமத்தில் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி மற்றும் ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மஹா கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 19ஆம் தேதி முதல் அனுக்ஞை ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், தனபூஜை, ரக்‌ஷோக்ன ஹோமம், வாஸ்து சாந்தி செய்து யாகசாலை நிர்மானித்து முதல் மற்றும் இரண்டாம் கால யாக வேள்வி, பூர்ணாஹூதி நடைபெற்று யாக சாலை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.

அதன்பின் இன்று மேளத்தாளங்களுடன் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய கலச குண்டங்கள் ஸ்ரீமத் பரமஹம்ஸேத்தியாதி ஸ்ரீ ஸ்ரீ ஸூதர்ஸன யதிராஜ ஜீயர் முன்னிலையில் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டது. இந்த மஹா கும்பாபிசேகத்தையொட்டி உக்கல் கிராமமே விழா கோலம் போல் காட்சியளித்தது.

இதையும் படிங்க:தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட சிலைகள் அமெரிக்க ஏல மையத்தில் கண்டுபிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details