தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூரம் ஸ்ரீமத் லக்ஷ்மி நாராயணன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - ஆதி கேசவ பெருமாள்

காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் ஸ்ரீமத் லக்ஷ்மி நாராயணன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம்

By

Published : May 25, 2022, 9:29 PM IST

காஞ்சிபுரம்:வைணவ ஆழ்வார்களில் ஒருவரான கூரத்தாழ்வார் கோயில் கொண்டுள்ள காஞ்சிபுரம் அருகே கூரம் எனும் கிராமத்தில் ஸ்ரீமத் லக்ஷ்மிநாராயணன் திருக்கோயிலில் லட்சுமி நாராயண பெருமாள், தாயார், ஆண்டாள், ராமானுஜர், கூரத்தாழ்வார் உள்ளிட்டோருக்கு தனித்தனி சந்நிதிகள் அமைக்கப்பட்டதை அடுத்து அக்கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று (மே 25) வெகு விமரிசையாக நடைபெற்றது.

அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, அமைக்கப்பட்ட யாகசாலைகளில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின், பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்களில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க புனித நீர் கலசங்களை சுவாமி சந்நிதிகளின் மேலுள்ள கோபுர கலசங்களுக்கு புனிதநீர் தெளித்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தப்பட்டது.

ஸ்ரீமத் லக்ஷ்மி நாராயணன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
இந்த மகா கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளாமான வைணவ பெருமக்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் திரளாக கலந்துகொண்டனர். பின்னர், அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் "கோவிந்தா.. கோவிந்தா" எனப் பக்தி முழக்கங்களுடன் மனமுருக கும்பாபிஷேகத்தைக் கண்டு களித்தனர். அதைத்தொடர்ந்து, சுவாமி தரிசனத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீமத் லக்ஷ்மி நாராயணன் திருக்கோயில்
இதையும் படிங்க:மதுரையில் முனியாண்டி திருவிழா: 470 ஆடுகளை வெட்டி 10 ஆயிரம் பேருக்கு கறிவிருந்து!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details