தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனுமதியின்றி தண்ணீர் எடுத்த லாரி, டிராக்டர் பறிமுதல்! - Drinking water problem

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் பகுதியில் அனுமதியின்றி ஆழ்துளை கிணற்றில் குடிநீரை எடுத்த லாரி, டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

lorry-seized

By

Published : May 27, 2019, 1:33 PM IST

வாலாஜாபாத், அதன் சுற்றுவட்டார கிராமங்களில் போதிய அளவு மழை இல்லாததால் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்துவருகிறது. இந்நிலையில், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கிணறு, ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீரை உறிஞ்சி லாரிகள், டிராக்டர்கள் அதிக விலைக்கு விற்பதாக தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

அந்தப் புகார்களின் அடிப்படையில் சார் ஆட்சியர் சரவணன் உத்தரவின்பேரில் வாலாஜாபாத் வட்டாட்சியர் கோடீஸ்வரன், மண்டல துணை வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் நேற்று சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது நத்தாநல்லுார் சேர்காடு பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் லாரிகளில் குடிநீர் எடுப்பதை பார்த்த அலுவலர்கள், அந்த வாகனங்களைப் பிடித்து தண்ணீர் எடுக்க அனுமதி உள்ளதா என ஆய்வு செய்தனர். அதில் குடிநீர் எடுத்துச்செல்ல எந்த அனுமதியும் பெறவில்லை எனத் தெரியவந்ததையடுத்து, தண்ணீர் எடுக்கப் பயன்படுத்திய லாரி, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

அனுமதியின்றி தண்ணீர் எடுத்த லாரி, டிராக்டர் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டரில் பதிவு எண் இல்லை எனவும், குடிநீர் ஆதாரத்திற்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதாலும், அதன்மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீர் தேவை அதிகம் ஏற்பட்டுள்ளதால் நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சி அனுமதியின்றி விற்பனை செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது போன்ற தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details