காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகேயுள்ள பிள்ளைச்சத்திரம் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திருப்பத்தூரிலிருந்து சென்னை நோக்கி பின்னால் வந்த கார் மீது எதிர்பாராதவிதமாக லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த ஓட்டுநர் ஜாகிர் அகமது(48, சவுத் அகமது(48), சவுக்கத்(35) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.