தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சி தேர்தல் புதிய மாவட்டங்களை பாதிக்காது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் - Local Bady elections do not affect new districts

காஞ்சிபுரம்: உள்ளாட்சித் தேர்தல் புதிய மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தாது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Interview with Minister Mafa Pandiyarajan

By

Published : Nov 20, 2019, 4:43 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய வார விழா நேற்று தொடங்கியது. இந்த விழாவை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குறுகிய காலத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் அரைநாள் அருகிலுள்ள கண்காட்சியை காண்பதற்கும், அந்த கண்காட்சியில் பார்த்தது குறித்த வினாடி வினா போன்ற சிறப்பு தேர்வுகள் நடத்தப்படும்.

இது அடுத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். கீழடியில் 2,580 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்திய பொருள்களை கண்டெடுப்பது நம் வரலாற்று சாதனையாகும்.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி

மேலும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் எக்காரணத்தைக் கொண்டும் உள்ளாட்சி தேர்தல் தடைபடாது. அதேபோல் புதிய மாவட்டங்களுக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார்.

இதையும் படிங்க:20 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிய மாமல்லபுரம்!

ABOUT THE AUTHOR

...view details