தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்றத்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்... 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு! - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

பிரசித்திபெற்ற குன்றத்தூர் முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

kundrathur-murugan-temple-kumbabishekam குன்றத்தூர் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்.. பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நடந்தேறியது..
kundrathur-murugan-temple-kumbabishekamகுன்றத்தூர் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்.. பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நடந்தேறியது..

By

Published : Apr 25, 2022, 5:53 PM IST

காஞ்சிபுரம்மாவட்டம், குன்றத்தூரில் மிகவும் சிறப்பு வாய்ந்த குன்றத்தூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு குடி கொண்டிருக்கும் தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் சுப்பிரமணியர் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருக்கோயில்களில் ஆகம விதிகளின்படி, ஆண்டுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று பிரசித்திபெற்ற குன்றத்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக வெகுவிமரிசையாக நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப்பிறகு கும்பாபிஷேகம் நடத்த இந்துசமய அறநிலையத்துறை முடிவெடுத்த நிலையில், 2 கோடி ரூபாய் மதிப்பில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது.

குன்றத்தூர் முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்.. பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நடந்தேறியது..

இதனையடுத்து, கோயில் கோபுரங்கள், கலசங்கள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டன. கடந்த 20ஆம் தேதியன்று யாக சாலைகள், அலங்காரங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ராஜகோபுரத்தின் மீதும், மூலவர் கோபுரம் உள்ளிட்ட பிற கோபுரங்களிலும், கலசங்களிலும் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் உட்பட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களின் வருகையைக் கருத்தில் கொண்டு புனித நீர் ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்டது.

குன்றத்தூர் முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்

குன்றத்தூர் முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகத்தின்போது பக்தர்கள் அனைவரும் அரோகரா கோஷத்துடன் கும்பாபிஷேகத்தைப் பரவசத்துடன் கண்டு களித்தனர். மேலும் கும்பாபிஷேகத்தையொட்டி, ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு உற்சாகத்துடன் கும்பாபிஷேகம்!

ABOUT THE AUTHOR

...view details