தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரியாணி விருந்துவைத்த தாசில்தார்: பொதுமக்கள் அதிர்ச்சி! - குன்றத்தூர் தாசில்தார் வைத்த பிரியாணி விருந்து

காஞ்சிபுரம்: கரோனா தடுப்பு பணியில் சிறந்து விளங்கியதற்காக முதலமைச்சரிடமிருந்து விருது வாங்கிய குன்றத்தூர் தாசில்தார் வைத்த பிரியாணி விருந்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பிரியாணி விருந்துவைத்த தாசில்தார்: பொதுமக்கள் அதிர்ச்சி!
Kundrathur dhasildhar hosted briyani treat

By

Published : Aug 17, 2020, 8:54 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் புதிய தாலுகாவாக பிரிக்கப்பட்டு, குன்றத்தூரில் புதிய தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஜெயசித்ரா என்பவர் தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று முதலமைச்சரின் கையால் கரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறப்பு விருது பெற்றார்.

இந்த நிலையில் விருது பெற்றதை கொண்டாடும் விதமாக செம்பரம்பாக்கம் ஏரி அருகே உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான விடுதியில் சக ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து எற்பாடு செய்யப்பட்டது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட துணை ஆட்சியரும் கலந்துகொண்டார்.

குன்றத்தூர் வட்டத்தில் பணியாற்றக்கூடிய துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பாராட்டு விழா முடிந்ததும் வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி விருந்து நடைபெற்றது.

தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசு அலுவலர்கள் இது போன்று எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் விழா நடத்தியது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதாக விருது பெற்ற வட்டாட்சியர் இது போன்ற செயலில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குன்றத்தூர் வட்டாட்சியர் ஜெயசித்ரா கடந்த மாதம் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details