தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைக்கு முன்னே குடிமராமத்துப் பணிகள் நிறைவு செய்யப்படும் - காஞ்சிபுரம் ஆட்சியர் - kanchipuram kudimaramathu work

காஞ்சிபுரம்: வேடல், வளத்தூர், எடையார்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிமராமத்துப் பணிகள் மழைக்காலத்திற்கு முன்பாக முடிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

குடிமராமத்து பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

By

Published : Sep 15, 2019, 7:47 AM IST

தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரத் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 38 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் வேடல், வளத்தூர், எடையார்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிமராமத்துப் பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவின் பேட்டி

மேலும் வேடல் பகுதியில் கரை பலப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு நீர்ப்பாசனம் பெறும் விவசாயிகளின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி பொறியாளர் பாஸ்கரன், இளம் பொறியாளர் மார்கண்டன், பொதுப்பணித் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், "காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்துப் பணியின் கீழ் 38 பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மழைக்காலத்தில் தயார் நிலையில் வைக்கப்படும்.

மேலும் ஊராட்சி ஒன்றியங்கள் மூலமாக 188 ஏரிகளும் ஆயிரத்து 167 குளம் குட்டைகளை தூர்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details