கேளம்பாக்கம் அருகே குத்துச்சண்டை போட்டி- 500 வீரர்கள் பங்கேற்பு - Kancheepuram kelambakkam boxing compeition
காஞ்சிபுரம்: கேளம்பாக்கத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 500 வீரர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த படூரில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடத்தப்பட்டது. இதில், சூப்பர் சீனியர், சீனியர் ,ஜூனியர், சப்-ஜூனியர் ஆகிய பிரிவுகளின் கீழ் குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எல்.இதயவர்மன் நினைவு பரிசையும், கோப்பை மற்றும் மடல் ஆகியவற்றையும் வழங்கினார்.பிறகு போட்டியாளர்களிடம் உரையாடியவர், இப்போட்டியை, அதிகப்படியான இளைஞர்கள் மற்றும் மக்களிடையே கொண்டு செல்லவேண்டும், மேலும் அதிகப்படியான போட்டியாளர்கள் கலந்து கொண்டு உலக அளவில் புகழ்பெற்று நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.