காஞ்சிபுரம்: உத்திரமேரூர் வட்டத்திற்கு உள்பட்டது காவாந்தண்டலம் கிராமம். இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மாகரல் என்ற பகுதியில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியிலிருந்து காவாந்தண்டலம் வழியாக சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகளில் எம்சாண்ட் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த லாரிகளால் அப்பகுதியில் அதிகளவு சுற்றுச்சூழல் பாதிப்பும், வாகன விபத்தும் ஏற்படுகிறது எனக் கூறி கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் அவ்வழியாக வந்த லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் டி.எஸ்.பி முருகன், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.