காஞ்சிபுரம் மாவட்டம், முட்டுக்காட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு சுமார் 1.18 ஏக்கர் நிலம் விற்ற வருமானத்தைக் கணக்கில் காட்டவில்லை எனக் கூறி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி மீது வருமான வரித்துறை 2018ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கை எழும்பூர் நிதிமன்றத்திற்கு மாற்றக்கோரி கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார்.
கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! - income tax case
சென்னை: கார்த்தி சிதம்பரம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
chennai high court
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி மீதான வருமானவரி வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அத்துடன் தமிழக அரசு, வருமானவரித்துறை, தலைமைப் பதிவாளர் ஆகியோர் இதுகுறித்துப் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Last Updated : Aug 21, 2019, 5:10 PM IST