காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், “காவிரி குண்டாறு இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசின் செயல் மனிதாபிமானமற்றது. போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். ஜெயலலிதாவின் பிறந்த நாளை பெண்கள் பாதுகாப்பு தினமாக அரசு அறிவித்துள்ள நிலையில், காவல்துறை உயர் அதிகாரி மீது அத்துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரே பாலியல் புகார் அளித்திருப்பது வேதனையளிக்கிறது.
’கர்நாடகத்தின் செயல் நியாயமற்றது’ - ஜி.கே.வாசன் - ஜி.கே.வாசன்
காஞ்சிபுரம்: காவிரி குண்டாறு இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசின் செயல் நியாயமற்றது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
vasan
பெட்ரோல் டீசல் விலை உயர்வு சாதாரண மக்களை பெரிதும் பாதிக்கிறது. இதனால் விலைவாசியும் உயர்ந்து மக்களுக்கு பொருளாதார சுமை கூடுகிறது. எனவே, பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: கால்நடை பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள்!