காஞ்சிபுரம் அடுத்த ஆன்டிசிறுவள்ளூர் பகுதியில் வசிப்பவர் பூபதி. இவருடைய மகள் மதிப்பிரியா(19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பக்கத்து கிராமமமான காரையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் இப்பெண்ணை அழைத்துச்சென்றதாக கைப்பேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் மற்றும் உறவினர்கள்இளம்பெண்ணை தேடிவந்த நிலையில் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் இவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதியினர் காஞ்சி தாலூகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகித்ததின் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மக்கள் மன்றத்தினரும் காவல்துறையினரிடம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை உடனடியாக கைது செய்ய கோரினர். தொடர்ந்து காவல்துறையைக் கண்டித்து மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.