தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

34ஆம் நாள் செண்பகப் பூ அலங்காரத்தில் அத்திவரதர்! - காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: அத்திவரதர் தரிசனத்தின் 34ஆம் நாளான இன்று அத்திவரதருக்கு பச்சை, இளஞ்சிவப்பு பட்டாடை உடுத்தி செண்பகப் பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

athi varadhar

By

Published : Aug 3, 2019, 4:48 PM IST

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்திவரதர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 34ஆம் நாளான இன்று பச்சை, இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சியளித்தார். விடுமுறை தினமான இன்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவரை தரிசனம் செய்து வருகின்றனர்.

அத்திவரதர்

ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுவதால் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி கருட சேவை உற்சவம் நடைபெறுவதால் மாலை 5 மணிக்கு மேல் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பது குறிப்பிடதக்கது.

ABOUT THE AUTHOR

...view details